கமலா திரையரங்கில் சரத் குமார்
கமலா திரையரங்கில் சரத் குமார்படம் | சரத் குமாரின் எக்ஸ் பதிவிலிருந்து

திரையரங்கில் ரசிகர்களுடன் ‘டியூட்' சரத் குமார்!

திரையரங்கில் ரசிகர்களுடன் ‘டியூட்' திரைப்படத்தைக் கண்டுகளித்த சரத் குமார்!
Published on

சென்னை: ‘டியூட்' திரைப்படத்தை நடிகர் சரத் குமார் சென்னையிலுள்ளதொரு திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். இந்தத் தகவலை அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகி தீபாவளி விடுமுறையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘டியூட்' படத்தில் குணசித்திர கதாபாத்திரமேற்று கலக்கியுள்ள சரத் குமாரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, அவரைக் கொண்டாட வைத்திருக்கிறது. சரத் குமாரை இப்படி பார்த்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சரத் குமார் ரசிகர்களுடன் வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் ‘டியூட்' திரைப்படத்தைக் கண்டுகளித்தார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் சரத் குமார் வெளியிட்டுள்ளதொரு பதிவில், ‘தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘டியூட்' திரைப்படத்தை, கமலா திரையரங்கில் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடுவதை இன்று நானும், இயக்குனர் கீர்த்தீஸ்வரன் அவர்களும் இடைவெளி வரை கண்டு மகிழ்ந்து, தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியுற்றோம்’ என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Sarath Kumar enjoyed watching the movie 'Dude' with fans in the theater!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com