
மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் மோகன்லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு வரும் 23-ஆம் தேதி விருதளித்து கௌரவிக்கப்பட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மோகன்லால், மலையாள சினிமாவுக்கு கிடைத்த கௌரவம் இது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: “20 ஆண்டுகளுக்குப் பின் மலையாள சினிமாவுக்கு இவ்விருது வழங்கப்படவிருக்கிறது. இவ்விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்துகொள்கிறேன். மலையாள சினிமாவில் என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைத்து பெரிய கலைஞர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பிற திரைத்துறைகளைப் போலவே மலையாள திரைத்துறையும் பெருமைக்குரிய ஒன்று. நான் மலையாள சினிமாவிலிருந்து வந்தவன். இங்கு பெரும் கலைஞர்கள், பெரும் இசையமைப்பாளர்கள், பெரும் இயக்குநர்கள் உள்ளனர். அவர்களே என்னைச் செதுக்கியவர்கள். என்னுள் இருந்த கலைஞனை வெளிக்கொண்டு வந்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்துகிறேன்” என்றார்.
இதையும் படிக்க: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.