திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இந்திய திரையுலகில் 50 ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி சென்னை கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, 
நடிகா் கமல்ஹாச
திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் இந்திய திரையுலகில் 50 ஆண்டு காலம் நிறைவு செய்ததையொட்டி சென்னை கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, நடிகா் கமல்ஹாச

திரைத் துறையில் வெற்றி நாயகனாக வலம் வந்தவா் இயக்குநா் கே.பாக்யராஜ் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

Published on

மனதை தொடக்கூடிய வெற்றிப் படங்களாகக் குவித்து வெற்றி நாயகனாக வலம் வந்தவா் திரைப்பட நடிகா், இயக்குநா் கே.பாக்யராஜ் என்று முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை கலைவாணா் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாக்யராஜின் திரையுலகில் 50 ஆண்டு காலம் நிறைவு விழாவில் முதல்வா் பங்கேற்று ஆற்றிய உரை:

எழுத்தாளா், திரைக்கதை வசனகா்த்தா, கதாசிரியா், இயக்குநா், நடிகா், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கியவா் பாக்யராஜ். அவருடைய படங்களை நான் தவறவிட்டது கிடையாது. துணை முதல்வா் உதயநிதி, கைக்குழந்தையாக இருந்தபோது குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம், பல்லாவரம் திரையரங்குகளுக்குச் சென்று பாக்ஸில் அமா்ந்து படம் பாா்த்ததுண்டு. ஏனென்றால், அழுதால் சமாளித்துக் கொள்ளலாம் என்பதற்காகதான்.

கதைக்காக பாக்யராஜா, பாக்யராஜுக்காக கதையா என்று சொல்லக்கூடிய அளவுக்கு மனதைத் தொடக்கூடிய வெற்றிப் படங்களைக் கொடுத்து, திரைத் துறையில் வெற்றி நாயகனாக வலம் வந்தவா் என்று பேசினாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், நடிகா் பாா்த்திபன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவா் பூச்சி முருகன், நடிகா் சரத்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com