மீண்டும் வருகிறது 'மான் கராத்தே' ஜோடி !

'மான் கராத்தே' வெற்றிப்பட கூட்டணியான சிவகார்த்திகேயன் - ஹன்சிகா ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒன்று சேர்கிறார்கள்.
மீண்டும் வருகிறது 'மான் கராத்தே' ஜோடி !

சென்னை: 'மான் கராத்தே' வெற்றிப்பட கூட்டணியான சிவகார்த்திகேயன் - ஹன்சிகா ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் ஒன்று சேர்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதற்கு அடுத்த படியாக இயக்குனர் பொன்ராமின் அடுத்த படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அந்த படத்தில்   சமந்தா நடிக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனரான ரவிக்குமாருடன்  சிவகார்த்திகேயன் ஜோடி சேர உள்ளார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்க உள்ளார். இதன் மூலம் ‘மான் கராத்தே’ படத்தில் இணைந்த வெற்றிக்கு கூட்டணி இந்தப் படத்திலும் தொடர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com