நா. முத்துக்குமாரின் ஆசிர்வாதம்: இயக்குநர் விஜய் உருக்கம்!

என்னுடைய சிறந்த நண்பரான அவர் தற்போது இல்லாததை நினைத்து வருந்துகிறேன்.
நா. முத்துக்குமாரின் ஆசிர்வாதம்: இயக்குநர் விஜய் உருக்கம்!

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் தேவி. தமன்னா, ஏமி ஜாக்ஸன் போன்றோரும் நடித்துள்ளார்கள். பிரபுதேவா, 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் தமிழ்ப்படம் இது. இதற்கு முன்னால் 2004-ல் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதல்முறையாக ஒரே சமயத்தில்  தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி  மொழிகளில் படமாக்கப்பட்ட பெருமை இந்தப் படத்துக்கு உண்டு. தேவி, அக்டோபர் 7-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் விஜய் பேசியதாவது:

என்னுடைய எல்லாத் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் கவிஞர் நா. முத்துக்குமாரின் பங்களிப்பு கட்டாயமாக இருக்கும். ஆனால் என்னுடைய சிறந்த நண்பரான அவர் தற்போது இல்லாததை நினைத்து வருந்துகிறேன். அவருடைய ஆசீர்வாதம் எங்கிருந்தாலும் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது. 

தேவி திரைப்படத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர் கணேஷ், பிரபு தேவா, தமன்னா, சோனு சூட், நாசர், ஆர் ஜே பாலாஜி மற்றும் சதீஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பிரபு தேவா பற்றியும் தமன்னா பற்றியும் நான் ஒன்று சொல்லியே ஆகவேண்டும். நம் தமிழ்த் திரையுலகம், பிரபு தேவா மீது வைத்திருக்கும் அன்பை திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள் ஹிந்தித் திரையுலகினர். அதேபோல் நடிப்புக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளும் ஒரு நடிகை தமன்னா. நிச்சயமாக அவருடைய தேவி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோகப் பாராட்டுகளைப் பெறும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com