மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 89வது பிறந்த நாளையொட்டி, திரையுலகினர் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கும் சிவாஜி இல்லத்தில் உள்ள புகைப்படத்துக்கும் மாலை அணிவித்து திரையுலகினர் மரியாதை செய்துள்ளார்கள். நடிகர் சங்கத் துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட ஏராளமான நடிகர் சங்க நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டார்கள்.