தமிழில் அறிமுகமாகிறார் நடிகை அனு இம்மானுவேல்!

மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவரும் நடிகை  அனு இம்மானுவேல் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் அறிமுகமாகிறார் நடிகை அனு இம்மானுவேல்!

விஷால், பிரசன்னா, அக்‌ஷரா கமல் போன்றோர் நடிக்கும் துப்பறிவாளன் படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். இதில் முக்கிய வேடத்தில் நடிக்க மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துவரும் நடிகை  அனு இம்மானுவேல் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனு. இதனால் துப்பறிவாளன் படத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்ட ராகுல் ப்ரீத் சிங், கால்ஷீட் பிரச்னையால் விலகியுள்ளார் என்றறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com