சமகால அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து விமரிசிக்கும் தரமணி போஸ்டர்கள்!

சமீபத்திய போஸ்டர்களில் சமகால அரசியல் குறித்த விமரிசனங்கள் மேலும் தென்படுகின்றன...
சமகால அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து விமரிசிக்கும் தரமணி போஸ்டர்கள்!

தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவருகிறது. இதையொட்டி இப்படம் குறித்த விளம்பரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. விளம்பர வாசகங்கள் சுவாரசியமாக மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன.

முதலில் வெளியிட்ட போஸ்டரில், தணிக்கைக் குழுவின் கூற்றுப்படி ஆண் 'ரா'வாக மது அருந்தினால் யூ/ஏ. பெண் 'ரா'வாக மது அருந்தினால் ஏ. ஆக தரமணி ஏ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. பிறகு வெளியிடப்பட்ட போஸ்டரில், ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க. பார்த்துக்கோ... என்று சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றுள்ளது.

சமீபத்திய போஸ்டர்களில் சமகால அரசியல் குறித்த விமரிசனங்கள் மேலும் தென்படுகின்றன. 'எங்க பீச்சுக்கா... கருப்பு வண்டி... கருப்பு ஹெல்மட்டு... நான் வேற கருப்புச் சட்டை... போராடப் போறோம்னு புடுச்சுட்டுப் போய்டுவாங்க...' என்றும் இன்னொரு போஸ்டரில், 'தம்பி, நீ எவ்வளவு 'நீட்'டி 'நீட்'டிக் கேட்டாலும் இனிமே டாக்டர் ஆகறதெலாம் ரொம்பக் கஷ்டம்' என்றும் எழுதி கவனத்தை ஈர்த்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com