புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட இயக்குநர் குந்தன் ஷா மறைவு

புகழ்பெற்ற ஹிந்தி திரைப்பட இயக்குநர் குந்தன் ஷா மறைவு

ஹிந்தி திரைப்படத் துறையில் புகழ்பெற்ற இயக்குநரான குந்தன் ஷா சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 69.

ஹிந்தி திரைப்படத் துறையில் புகழ்பெற்ற இயக்குநரான குந்தன் ஷா சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 69.
மாரடைப்பு காரணமாக, மும்பையிலுள்ள வீட்டில் குந்தன் ஷா மரணமடைந்ததாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அவரது இறுதிச் சடங்குகள், தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றன.
கடந்த 1947-ஆம் ஆண்டு பிறந்தவரான குந்தன் ஷா, புணேயில் உள்ள திரைப்பட நிறுவனத்தில் பயின்றார். கடந்த 1983-ஆம் ஆண்டில் அவர் முதன்முதலாக இயக்கிய "ஜானே பி தோ யாரோ' என்ற ஹிந்தித் திரைப்படம், தேசிய விருதை பெற்றது. "பிளாக் ஹியூமர்' எனப்படும் அவல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட இந்த படம், அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com