தென்னிந்திய ரசிகர்கள் முரட்டுத்தனமான ரசிகர்கள்! நடிகை சன்னி லியோனின் கருத்து!

வருடக் கடைசி வந்துவிட்டது. புத்தாண்டுக்கான நிகழ்ச்சி நிரல்கள் வெளிவந்து கொண்டிருக்கும்
தென்னிந்திய ரசிகர்கள் முரட்டுத்தனமான ரசிகர்கள்! நடிகை சன்னி லியோனின் கருத்து!


வருடக் கடைசி வந்துவிட்டது. புத்தாண்டுக்கான நிகழ்ச்சி நிரல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பங்களூருவில் நடைபெற விருக்கும் நடிகை சன்னி லியோனின் நிகழ்ச்சியான சன்னி நைட் இன் பங்களூரு நியூ இயர் ஈவ் 2018 (Sunny Night in Bengaluru NYE 2018) கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது கர்நாடகா ரக்‌ஷனா விதேக எனும் அமைப்பு (Karnataka Rakshana Vedike Yuva Sene). பெங்களூருவில் உள்ள நகவாரா பகுதியில் இருக்கும் ஒயிட் ஆர்ச்சிட் நட்சத்திர விடுதியில் டிசம்பர் 31-ம் தேதி பின்னிரவில் புத்தாண்டு விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதுபோன்ற கலாசாரத்துக்கு எதிராக நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது என்று கர்நாடகா அரசிடம் KRV அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிகழ்ச்சி அறிவிப்பு வந்ததிலிருந்து கடந்த சில நாட்களாக இந்த அமைப்பினர் சன்னி லியோனின் உருவப் படத்தை எரித்தும், போராட்டமும் செய்து வருகின்றனர். சன்னி லியோன் எப்படி பட்டவர், அவருடைய சரித்திரம் என்னவென்று அனைவரும் அறிந்ததே. எனவே இங்கு அவருடைய நிகழ்ச்சிகளை நடத்த நாங்கள் அனுமதிக்க முடியாது. தேவையெனில் எத்தகைய போராட்டமும் நிகழ்த்துவோம் என்று அறைக்கூவல் விடுத்தனர் ரக்‌ஷனா விதேக அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.

இத்தகைய நிகழ்வுகளை கர்நாடகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கூறினார் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி. அந்த நடிகை ((சன்னி லியோன்) இங்கே அழைத்து வர வேண்டாம். இந்த நிகழ்வை மக்கள் எதிர்க்கிறார்கள். கன்னட சம்மேளனம் மற்றும் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க வேண்டும் என்று கூறினார். கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெங்களூரு எம்ஜி சாலையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட் பிறப்பித்திருந்த உத்தரவுக்கிணங்க சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நடிகை சன்னி லியோனின் நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது கர்நாடகா அரசு.

இந்த முடிவை KRV அமைப்பின் அதிகாரி ஹரிஷ் வரவேற்றார். 'எங்களுக்கு இது ஒரு வெற்றி, அரசாங்கம் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது மகிழ்ச்சி. கலாசாரத்தை கெடுக்கும் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்படவில்லை என்றால், நாங்கள் 20 மாவட்டங்களில் இருந்து பெங்களூருவரை ஆர்வலர்களைத் திரட்டி, ஒரு மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருப்போம்’ என்று கூறினார்.

ஆனால் இதையெல்லாம் பெரிய பாதிப்பாக சன்னி லியோன் எடுத்துக் கொள்ளவில்லை. தென்னிந்திய ரசிகர்கள் முரட்டு ரசிகர்கள் என்று சமீபத்தில் அவர் கேரளாவின் ஒரு கடையைத் திறப்பு விழாவில் கூறியிருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ராத்ரி என்ற படத்தில் கதாநாயகியாக சன்னி லியோன் நடித்துள்ளார். கவர்ச்சியாக மட்டுமில்லாமல் பயங்கரமான பேயாகவும் நடித்துள்ளார் சன்னி லியோன். பூஷன் பட்டேல் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சித்ரஞ்சன் பட், மீட்பராய் அஞ்சான், யோ யோ ஹனிசிங், பிரனாய் ரிஜியா, அமர் மொஹைல் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள். சன்னி லியோன் நடனமாடிய பேபி டால் என்கிற பாடலை இதுவரை 8 கோடி பேர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளார்கள். 

பெங்களூரு ரசிகர்கள் சன்னி லியோன் நிகழ்ச்சி தடை செய்யப்பட்டதால் தமது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com