சுடச்சுட

  

  சென்னை சர்வதேசப் படவிழாவில் விருது பெற்ற தமிழ்ப் படங்கள்!

  By DIN  |   Published on : 22nd December 2017 12:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Oru_Kidayin_Karunai_Manu1

   

  15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விதார்த் நாயகனாக நடித்த 'ஒரு கிடாயின் கருணை மனு' சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

  சென்னையில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் மாநகரம், 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன், விக்ரம் வேதா, இப்படை வெல்லும் ஆகிய 13 தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்டன.

  சிறந்த தமிழ்ப் படத்துக்கான போட்டியில் விதார்த் நாயகனாக நடித்த ஒரு கிடாயின் கருணை மனு தேர்வாகி வெற்றியடைந்துள்ளது. 2-வது இடத்தை விக்ரம் வேதா படம் பெற்றது. தேர்வுக்குழுவினரின் சிறப்பு விருது மாநகரம் படத்துக்குக் கிடைத்தது.

  ஆட்டை மையமாகக் கொண்டு உருவான படம் "ஒரு கிடாயின் கருணை மனு'. ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இப்படத்தில், விதார்த், ரவீனா, ஜார்ஜ், கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் உள்ளிட்டோர் நடித்தார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுரேஷ் சங்கையா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai