சுடச்சுட

  

  அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ரஜினியைச் சந்திக்க முடியும்!

  By எழில்  |   Published on : 23rd December 2017 05:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajinikanth

   

  ரஜினியின் ரசிகர்களுடனான சந்திப்பில் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படும் என ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம். சுதாகர் கூறியுள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை இரண்டாவது கட்டமாக வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சந்திக்க முடிவெடுத்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

  கடந்த மே மாதம் நடைபெற்ற சந்திப்பில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், "போர் வரும் போது பார்த்துக் கொள்வோம். அதுவரை காத்திருங்கள்' என தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாகத் தெரிவித்தார். இதனால் ரஜினிகாந்தையும், தமிழக அரசியல் களத்தையும் ஒப்பிட்டு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின் போது தினமும் சுமார் ஆயிரம் ரசிகர்களை சந்திக்க ரஜினி முடிவு செய்துள்ளார். இதனால் மீண்டும் ரஜினிகாந்தின் அரசியல் களம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி வி.எம். சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

  ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அடையாள அட்டை வழங்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்ட உறுப்பினர்கள், பிற மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்கள் வந்து ஏமாற்றம் அடையவேண்டாம் என்று கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai