சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்வைவா பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து தலை விடுதலை பாடல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.