சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு

சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ். ராமகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி..
சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ரஜினி பாராட்டு

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல், 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தில்லியில் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இதில் தலா ரூ.1 லட்சம் சன்மானம், தாமிரப் பட்டயம், பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். 

இந்நிலையில் சாகித்ய அகாதெமி விருது பெறவுள்ள எஸ். ராமகிருஷ்ணனை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார் ரஜினி. தான் எழுதிய சஞ்சாரம் நாவலை ரஜினிக்குப் பரிசாக அளித்தார் எஸ். ராமகிருஷ்ணன். 

ரஜினி நடித்த பாபா படத்துக்கு எஸ். ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com