தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

எஸ்.எஸ். ராஜமெளலியின் அடுத்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்?

அனுஷ்கா போல தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுக்கும் பொருத்தமான நடிகையாக இருப்பார்...

News image
Updated On :29 ஜூன் 2018, 6:58 am

எழில்

ஏற்கெனவே புகழின் உச்சியில் இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு இது அடுத்தக்கட்ட முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவே எதிர்பார்க்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷின் கதவைத் தட்டியுள்ளது. 

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த வருடம் வெளியான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மகத்தான சாதனைகளைப் படைத்தது. 

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் ராஜமெளலி அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார். இவர்கள் மூவரும் இணைவதால் இப்போதைக்கு இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் ஆர்ஆர்ஆர் எனக் குறிப்பிடப்படுகிறது. டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் ராஜமெளலி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அனுஷ்கா போல தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுக்கும் பொருத்தமான நடிகையாக இருப்பார் என்பதால் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் என்று அறியப்படுகிறது.

வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, 2020-ல் வெளியாகவுள்ள இப்படம் குறித்த கூடுதல் அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.