கோடை விடுமுறையில் மீண்டும் வெளியாகவுள்ள சேரன் படம்!

மாணவமணிகளுக்குத் தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால்...
கோடை விடுமுறையில் மீண்டும் வெளியாகவுள்ள சேரன் படம்!

பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப்,"பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன். சொந்த பிரச்னைகள் மற்றும் கடைசியாக இயக்கிய ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை படத்தில் ஏற்பட்ட வியாபார நஷ்டம் ஆகியவற்றால் சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.  

இந்நிலையில் உமாபதி, கவிதா சுரேஷ், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்த திருமணம் படத்தை இயக்கி அதில் நடித்திருந்தார் சேரன். மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ஏப்ரல் 12 அன்று மீண்டும் வெளிவரவுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு:

குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள்,  சென்டிமெண்ட் என நல்ல கதைக் களமும்,  அருமையான விமரிசனங்களும் கிடைத்தபோதும், மாணவமணிகளுக்குத் தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை. பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com