பிஎம் நரேந்திர மோடி படத்தைக் காண ஆவலாக உள்ளேன்: காஜல் அகர்வால்

விவேக் ஓப்ராய், படம் குறித்து ட்வீட் ஒன்றை சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். அதற்குப் பதில் அளித்த...
பிஎம் நரேந்திர மோடி படத்தைக் காண ஆவலாக உள்ளேன்: காஜல் அகர்வால்

ஓமுங் குமார் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ள பி.எம். நரேந்திர மோடி எனும் பெயரிலான திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தை  இம்மாதம் 5-ஆம் தேதி திரையிட  முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.  இப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை  வாரியம் (சிபிஎஃப்சி)  யு சான்றிதழ் அளித்துள்ளதாகவும், திரைப்படம் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேர்தல் நடைபெறுவதற்கு முன் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்தால் அது தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்தத் திரைப்படம் வெளியிடுவதற்கு தடை கோரி காங்கிரஸை சேர்ந்த ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்தத் திரைப்படத்தை வெளியிடுவது மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கையாகும். இதனால்,  பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை  உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் அளிக்காத நிலையில்,  பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது . தேர்தல் நடைபெறும் நாளில் திரைப்படம் வெளியாவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுவதால், இந்த விவகாரத்தை முறையிட உரிய இடம் தேர்தல் ஆணையம்தான் என்று கூறி தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின்  வாழ்க்கையைச் சித்திரிக்கும் பி.எம். நரேந்திர மோடி  திரைப்படத்தை, தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் எந்த அரசியல் கட்சி அல்லது தனிப்பட்ட நபர்களை ஊக்குவிக்க உதவும் எந்தவொரு திரைப்படமும் மின்னணு ஊடகங்களில் காண்பிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எம். நரேந்திர மோடி படக்கதாநாயகன் விவேக் ஓப்ராய், படம் குறித்து ட்வீட் ஒன்றை சில நாள்களுக்கு முன்பு வெளியிட்டார். அதற்குப் பதில் அளித்த காஜல் அகர்வால், இந்தப் படத்தைக் காண ஆவலாக உள்ளேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தப் படம் சிறப்பாக இருக்கப் போகிறது என்று ட்வீட் வெளியிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com