சுடச்சுட

  
  Rithesh1

   

  நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் இன்று காலமானார்.

  சின்ன புள்ள படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான ரித்திஷ், சமீபத்தில் வெளியான எல்கேஜி படத்திலும் நடித்திருந்தார்.

  46 வயது ரித்திஷின் மறைவு குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

  ரித்திஷின் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ரித்திஷ் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவார். தென்னிந்திய நடிகர் தேர்தலில் அவருடன் பயணித்தேன். அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர். நல்ல தம்பியை இழந்துவிட்டேன். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai