சுடச்சுட

  
  kesari_20

   


  2019-ல் விரைவாக ரூ. 100 கோடி வசூலை அடைந்த ஹிந்திப் படம் என்கிற பெருமையை பெற்ற கேசரி படம் தற்போது ரூ. 150 கோடி வசூலை அடைந்துள்ளது. 

  வெளியான 7-வது நாளில் ரூ. 100 கோடியைத் தொட்டது. இதன்மூலம் 2019-ம் வருடம் 7 நாள்களில் இந்த இலக்கை அடைந்த முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றது. 8 நாள்களில் கல்லிபாய் படமும் 9 நாள்களில் டோட்டல் தமால் படமும் ரூ. 100 கோடி வசூலை எட்டின. 

  அக்‌ஷய் குமார், பரினீதி சோப்ரா நடிப்பில் அனுராக் சிங் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - கேசரி. இப்படத்தின் இணை தயாரிப்பாளர் கரன் ஜோஹர். பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 36-வது சீக்கியப் படையைச் சேர்ந்த 21 வீரர்கள், 10000 பேர் இணைந்த ஆப்கன் தாக்குதலை எதிர்கொண்ட விதம்தான் இப்படத்தின் மையக்கரு. 

  சராகர்ஹி சண்டை என்று நினைவுகூரப்படும் இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கேசரி படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 21.50 கோடி வசூலை அடைந்தது. 2019-ம் ஆண்டில் வேறெந்த ஹிந்திப் படமும் இந்த வசூலை அடையவில்லை. இதற்கு முன்பு கல்லிபாய் ரூ. 19.40 கோடி வசூலித்ததே சாதனையாக இருந்தது. கேசரி படம் இந்தியாவில் 3600 திரையரங்குகளிலும் மற்ற நாடுகளில் 600 திரையரங்குகளிலும் என ஒட்டுமொத்தமாக 4200 திரையரங்குகளில் வெளியானது.

  தற்போது 25-வது நாளில் இந்தியாவில் ரூ. 150 கோடி வசூலைத் தாண்டியுள்ளது கேசரி படம். முதல் வாரம் ரூ. 106 கோடி வசூலை அடைந்த இந்தப் படம், அடுத்த வாரம் ரூ. 30 கோடி வசூலித்தது. மூன்றாவது வாரத்தில் ரூ. 12 கோடியும் நான்காவது வாரத்தில் ரூ. 3.70 கோடி வசூலையும் அடைந்து மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai