சுடச்சுட

  

  ‘மூடர் கூடம்’ இயக்குநர் திடீர் பதிவுத் திருமணம்!

  By சினேகா  |   Published on : 17th April 2019 01:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Naveen-Director

   

  ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ஒன்றையும் இயக்குகிறார் நவீன். இப்படத்தில் ஷாலினி பாண்டே கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’என்ற படத்தை இயக்கி, நடித்தும் உள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தனது பதிவுத் திருமண செய்தியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நவீன்.

  முதல் பதிவில், அவர் கூறியதாவது, 'நவீன் என்பது என் அம்மா சிவசங்கரி நாவல் படிச்சிட்டு வெச்ச பேரு. என் ஊருல போயி நீங்க ஷேக்தாவுத் எனும் என் சான்றிதழ் பெயரை சொல்லி விசாரித்தால் எவர்க்கும் தெரியாது. நான் இஸ்லாமிய குடும்பதிலிருந்து வந்தவன் என்பதை நானே பல நேர்காணல்களில் கூறியுள்ளேன். இதெல்லாம் கண்டுபிடிப்பில் சேராது.' அதற்கு அடுத்து, தனது திருமணப் பதிவில், 'எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை - மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம்' என்று பதிவிட்டுள்ளார்.

  நண்பர்களும் திரைத் துறையினரும் நவீனுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai