சுடச்சுட

  

  தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் 3 தமிழ்ப் படங்கள்!

  By எழில்  |   Published on : 17th April 2019 11:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kanchana6511

   

  கடந்த வாரம் தமிழ்ப்புத்தாண்டுத் தருணமாக இருந்தாலும் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

  இந்த வாரம், நாளை தேர்தல் முடிந்தபிறகு, வெள்ளியன்று மூன்று தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன. 

  காஞ்சனா 3, மெஹந்தி சர்க்கஸ், வெள்ளைப்பூக்கள். இந்த மூன்று படங்களில் காஞ்சனா 3 படம் அதிகக் கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் - காஞ்சனா 3. இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் போன்றோர் நடித்துள்ளார்கள். ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராகவா லாரன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. 

  விவேக் கதாநாயகனாக நடித்துள்ள வெள்ளைப்பூக்கள் படம், நாளை வெளிவருகிறது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளார்கள். விவேக், சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இயக்கம் - விவேக் இளங்கோவன்.

  இயக்குநர் ராஜூ முருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் மெஹந்தி சர்க்கஸ். அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ரங்கராஜ், ஸ்வாதி த்ரிபாதி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஷான் ரோல்டன். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai