
தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரி என ஒட்டுமொத்தமாக 95 மக்களவை தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் (38), கர்நாடகம் (14), மகாராஷ்டிரம் (10), உத்தரப் பிரதேசம் (8), அஸ்ஸாம் (5), பிகார் (5), ஒடிஸா (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), ஜம்மு-காஷ்மீர் (2), மணிப்பூர் (1) ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 15.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இத்தேர்தலில், சுமார் 1,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளார்கள். அதன் புகைப்படங்களும் விடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.