Enable Javscript for better performance
Ner Konda Paarvai- Dinamani

சுடச்சுட

    

    நேர்கொண்ட பார்வை படத்தில் கூடுதலாக 25 நிமிடக் காட்சிகள்! காரணம் என்ன?

    By எழில்  |   Published on : 05th August 2019 04:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    NerkondaPaarvai_65

     

    சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படமான நேர்கொண்ட பார்வை-யை இயக்கியுள்ளார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் இது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 8 அன்று இப்படம் வெளிவரவுள்ளது.

    இந்நிலையில் ஹிந்தியில் பிங்க் படத்தின் கால அளவு 130 நிமிடம் மட்டுமே. ஆனால் தமிழில் நேர்கொண்ட பார்வை 158 நிமிடங்களுக்கு உள்ளது. ஏன் இந்த மாற்றம்? ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பட இயக்குநர் வினோத் அளித்த பேட்டி:

    மூலப்படத்தின் அடிப்படை அம்சத்தை மாற்ற விரும்பவில்லை. எனினும் அஜித் சாரின் ரசிகர்களை மனத்தில் கொண்டு கூடுதலாக 25 நிமிடங்களை நேர்கொண்ட பார்வை-யில் இணைத்துள்ளேன். வித்யா பாலன் வருகிற 10 நிமிடங்களும் இதில் உள்ளன. படத்தின் மையக்கருத்தை இழக்காமல் கமர்ஷியல் படமாக உருவாக்க எண்ணினேன் என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai