கமலின் விசேஷ நாளில் மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு: நடிகை தகவல்!

கமலின் விசேஷ நாளில் மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 படப்பிடிப்பு: நடிகை தகவல்!

கமல் திரையுலகுக்கு வந்து இன்றுடன் 60 வருடங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் கமல்- ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின்...

கமல் திரையுலகுக்கு வந்து இன்றுடன் 60 வருடங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில் கமல்- ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் பெரிய வெற்றியடைந்தது. இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை - அனிருத்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங், இந்தியன் 2 தொடங்கியது என்கிற விடியோவுடன் கூடிய அறிவிப்பைத் தன்னுடைய இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com