பெண்களுக்கு எதிராகப் பேசிய சர்ச்சையில், பாக்யராஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்!

பெண்கள் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் எனப் பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தக் காலச்சூழலில்
பெண்களுக்கு எதிராகப் பேசிய சர்ச்சையில், பாக்யராஜுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம்!

கருத்துகளை பதிவு செய் என்கிற படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விழாவில் பாக்யராஜ் பேசியதாவது: ஒரு பட்டிமன்றத்தில், ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று பேசி, விவாதம் செய்தேன். பெண்கள் நீங்கள் இடம் கொடுப்பதால் தான் தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஆண்கள் தவறு செய்தால் அது போகிறபோக்கில் சென்றுவிடும். பெண்கள் தவறு செய்தால் அது பெரிய தப்பாகிவிடும். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு ஆண்கள் மட்டும் காரணமில்லை. அவர்கள் செய்தது தவறு என்றால், அதற்கான வாய்ப்புகளை பெண்கள் நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். மகளின் பாதுகாப்புக்காகத்தான் ஒரு தந்தை செல்போன் வாங்கித் தருகிறார். ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் தனியாகச் சென்று ரகசியமாக யாருடனோ பேசுவது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றார். 

இதையடுத்து, பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பாக்யராஜுக்குத் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சமுதாய நலன் சார்ந்து பெண்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று நீங்கள் அறிவுரை கூறியது மிகவும் பாராட்டத்தக்கது. மட்டுமல்லாமல் துணிச்சலான கருத்தும் ஆகும். தொடர்ந்து நீங்கள் இந்தியக் கலாசாரத்தைச் சிதைக்கின்ற வகையிலும் பால்மனம் மாறா குழந்தைகளின் கொடூரக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் பெண் கிரிமினல்களைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பதிவிட்டுச் சமுதாயச் சீர்திருத்தத்தினை ஏற்படுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அதற்குத் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் உறுதுணையாகப் பக்கபலமாக இருக்கும் என்பதை இக்கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். 

பெண்கள் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் எனப் பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தக் காலச்சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துக்களைத் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கம் பாராட்டுகிறது. தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com