Enable Javscript for better performance
இது எப்படி இருக்கு!  'தலைவர்' ரஜினியின் அரிய 9 புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு- Dinamani

சுடச்சுட

  

  இது எப்படி இருக்கு!  'தலைவர்' ரஜினியின் அரிய 9 புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

  By உமா ஷக்தி  |   Published on : 12th December 2019 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajni

  Superstar Rajnikanth

   

  இன்று சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு 70-வது பிறந்த நாள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் வயது வித்யாசமின்றி அவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. ரஜினியைத் திரையில் பார்க்க அலைமோதும் கூட்டம், ஆர்ப்பரித்து கொண்டாடுவார்கள் ரசிகர்கள் என்பதை நேற்று சென்னையில் பல முக்கியமான திரையரங்குகளில்  ரீ ரிலிஸான பாட்ஷா படம் நிரூபித்தது.

  ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 -ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், ஒரு மராட்டிய குடும்பத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் . ஜிஜாபாய் மற்றும் ரமோஜிராவ் கெய்க்வாட் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை  போலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றினார். 


  கன்னடத்தில் புராண நாடகங்களில் நடித்து தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார் ரஜினிகாந்த்.  இளம் வயதில் அவர் ஏற்று நடித்த மிக முக்கியமான கதாபாத்திரம் துரியோதனனின் பாத்திரம். தனது வீட்டின் அருகே உள்ள  ராமர் அனுமன் கோவிலில் சண்டை பயிற்சி செய்வார். 


  கன்னட நாடகம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த போது, இயக்குனர் கே.பாலசந்தர் ரஜினிகாந்தைக் கவனித்தார். இயக்குனர் இமயம் ரஜினியை தமிழ் பேசக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். குருநாதரை உள்ளுணர்வாக உணர்ந்த ரஜினிகாந்த் அதை உடனடியாகச் செய்தார். அவரது தாய்மொழி மராத்தி என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளைக் கற்று தென்னிந்திய மற்றும் வட இந்தியத் திரையுலகத்திலும்ன் நற்பெயர் பெற்றார். ப்ளட்ஸ்டோன் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்தார். ரஜினிகாந்த் மொத்தம் 168 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  1975-ல் இயக்குனர் கே.பாலசந்தரின் அறிமுகத்தில் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அதன்பின் தொடர்ந்து எதிர்நாயகன் கதாப்பாத்திரங்களில் நடித்த ரஜினிகாந்த் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவத புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

  ரஜினி முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்த படம் 'மூன்று மூகம்'. இந்தப் படத்துக்காக அவருக்கு தமிழக அரசிடமிருந்து 'சிறந்த நடிகர்' விருது கிடைத்தது.

  'பில்லா’தான் ரஜினிகாந்தின் முதல் மிகப் பெரிய வணிக வெற்றிப் படம் , இது அமிதாப் பச்சன் நடித்த டான் என்ற படத்தை தழுவி எடுத்த படமாகும்.

  கல்லூரி இதழுக்காக ரஜினிகாந்தை நேர்காணல் செய்யச் சென்ற லதா ரங்காசாரியும் அப்போதுதான் முதன்முதலாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர். திருப்பதில், பிப்ரவரி 26, 1981 அன்று லதாவை தன்னுடய 31 ம் வயதில் திருமணம் செய்தார் ரஜினிகாந்த் . அவர்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 

  1988 -ம் ஆண்டில், ரஜினிகாந்த் ஆங்கில அதிரடி சாகசப் படமான ப்ளட்ஸ்டோனில் நடித்தார்.

  ரஜினிகாந்துக்கு மிகப் பெரிய ரசிகர் படை உள்ளது. 2014 -ம் ஆண்டில் தனது முதல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கைத் அவர் திறந்த பிறகு,  24 மணி நேரத்திற்குள் 210,000 க்கும் மேற்பட்டவர்கள் அவரை பின்தொடர்பவர்களைப் பெற்றார் சூப்பர் ஸ்டார்.

  ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் இணையதளத்தில் பலர் கொண்டாடி மகிழ்கின்றனர். ஹேப்பி பர்த்டே தலைவா என்பதுதான் இன்றைய இணைய முழுக்கமாக இருக்கிறது.

  நாடு போற்றும் நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

  PC : Express Photo Service

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai