வெளியானது தர்பார் டிரெய்லர் வெளியீட்டு தேதி: படக் குழு அறிவிப்பு!

ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 16-ஆம் தேதி வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.
வெளியானது தர்பார் டிரெய்லர் வெளியீட்டு தேதி: படக் குழு அறிவிப்பு!


ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 16-ஆம் தேதி வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். ரஜினி நடிப்பில் 167-வது திரைப்படமாக உருவாகியுள்ள இதை லைகா புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, அனிருந் இசையமைத்துள்ளார்.

தர்பார் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பாபர் நடித்துள்ளார். 

இத்திரைப்படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே, படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு எதையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

இந்நிலையில், தர்பார் படத்தின் டிரெய்லர் வரும் 16-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, தர்பார் டிரெய்லர் எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com