இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த பூமி எவனுக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மற்றும் அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

இந்தியாவை மதச் சார்பற்ற நாடாக நீடிக்க வைப்போம்...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு மறுப்பு சொல்வோம்...

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்ஆர்சி) மறுப்பு சொல்வோம்...

மாணவர்கள் மீதான காவலர்களின் தாக்குதலுக்கு மறுப்பு சொல்வோம்...

இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என்று கூறியுள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு வரை இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

அஸ்ஸாமில் கடந்த 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணி (என்ஆர்சி) கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் இறுதிப் பட்டியல் கடந்த மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com