நட்சத்திர ஜோடி நடிக்கும் வரலாற்றுப் படம்

ஹிந்தி நடிகை கஜோலுக்கு இந்தியா முழுவதும் நிறைய ரசிகர்கள் உண்டு.
நட்சத்திர ஜோடி நடிக்கும் வரலாற்றுப் படம்

ஹிந்தி நடிகை கஜோலுக்கு இந்தியா முழுவதும் நிறைய ரசிகர்கள் உண்டு. திருமணம் ஆன பிறகு நடிகைகள் வெற்றியடைய முடியாது என்ற நிலையை மாற்றி,  25 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் வெற்றிகரமாக நடித்து வருகிறார். அண்மையில் பிரபல ஆங்கில சினிமா பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த ஜோடியின் புகைப்படம் அனைவரின் கவனத்தை கவர்ந்துள்ளது.. இவருடைய இளமையின் ரகசியம் என்னவாக இருக்கும் என்று நினைக்க வைத்த அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

தற்போது 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தில் கணவர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார் கஜோல். மராட்டிய போர்வீரர் தனாஜி மாலுசாரேவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் அவரது மனைவியான சாவித்ரி பாய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்த்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com