சுடச்சுட

  

  பகவத் கீதை குறித்து அவதூறாகப் பேசவில்லை: விஜய் சேதுபதி விளக்கம்

  By எழில்  |   Published on : 12th February 2019 11:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijay_sethupathi818181xx

   

  பகவக் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இதுபோன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம் என்று விஜய் சேதுபதி பேசியதாக சமூகவலைத்தளங்களில் மீம் ஒன்று வெளியானது. செல்போன் பறிப்பு விழிப்புணர்வு குறித்த விஜய் சேதுபதியின் கருத்து ஒன்று தனியார் தொலைக்காட்சியின் ட்விட்டர் கணக்கில் போஸ்டராக வெளியிடப்பட்டது. அதுதான், விஜய் சேதுபதி பகவத் கீதையைத் தவறாகப் பேசியது போல மாற்றப்பட்டு சமூகவலைத்தளங்களில் மீம்களாகப் பரப்பப்பட்டன.

  இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. அவர் கூறியதாவது: 

  என் அன்பிற்குரிய மக்களுக்கு, பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனித நூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்தச் சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai