சுடச்சுட

  

  யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!

  By எழில்  |   Published on : 13th February 2019 03:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  maari2_song1

   

  தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இப்பாடலைக் கண்ட ரசிகர்கள் நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகளை அளித்துள்ளார்கள். 

  பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்தது. மேலும் யூடியூப் தளத்தில், தமிழ்ப் பாடல்களில் அதிகப் பார்வைகள்  பெற்ற பாடல் என்கிற சாதனையையும் சமீபத்தில் அடைந்தது. தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான கொலவெறி பாடலும் சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவில் இடம்பெற்ற வச்சிண்டே பாடலும் முறையே 175 மில்லியன் பார்வைகளும் 183 பார்வைகளும் பெற்றிருந்தன. அந்த எண்ணிக்கைகளைத் தாண்டியுள்ளது ரெளடி பேபி பாடல். 

  தற்போது யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் 200 மில்லியன் அதாவது 20 கோடி பார்வைகளைப் பெற்று அசத்தியுள்ளது. எந்தவொரு தமிழ்ப் பாடலும் இதுவரை அடையாத எண்ணிக்கை இது. இதற்காக ரசிகர்களுக்கும் பிரபுதேவா, ஜானி, சாய் பல்லவி, பாடகி தீ, யுவன் சங்கர் ராஜா,  இயக்குநர் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai