சுடச்சுட

  

  பால் அபிஷேகம் செய்தபோது சரிந்த அஜித் கட் அவுட்:  ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதி!  (விடியோ)

  By எழில்  |   Published on : 10th January 2019 01:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Ajith cutout crashes

   

  அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. இன்று வெளியாகியுள்ளது. 

  இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் 60 அடி அஜித் கட் அவுட் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அஜித் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்ய ரசிகர்கள் சிலர் கட் அவுட் மீது ஏறினார்கள். அஜித் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்து பிறகு பால் அபிஷேகம் செய்தார்கள். அப்போது கூடுதலாகச் ரசிகர்கள் சிலரும் கட் அவுட் மீது ஏறினார்கள். இதனால் பாரம் தாங்காமல் அஜித் கட் அவுட் அப்படியே சரிந்தது. இதை எதிர்பாராத அஜித் ரசிகர்கள் சிலர் உடனடியாகக் குதித்தார்கள். இந்தச் சம்பவத்தில் 6 அஜித் ரசிகர்கள் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 6 பேரும்  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai