இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியல்!

உலக சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியல்!

திரைத் துறையில் உயரிய விருதான ஆஸ்கர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் 2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் பெயர்ப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 91-வது ஆஸ்கர் விருதினை வழங்கும் விழா பிப்ரவரி 25-ம் தேதி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அந்நிகழ்வில் சிறந்த திரைப்படம், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்ட 24 பிரிவுகளில், திரைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியல் இது.

சிறந்த திரைப்படங்கள்: பிளாக் பாந்தர் (Black Panther), கிரீன் புக் (Green Book), ரோமா (Roma), எ ஸ்டார் இஸ் பார்ன் (A star is Born), வைஸ் (Vice), தி ஃபேவரிட், பிளாக்கிளான்ஸ் மேன், போஹிமியன், ராப்ஸோடி.

சிறந்த நடிகர்கள்: கிறிஸ்டியன் பேல் (Christian Bale - Vice), பிராட்லி கூப்பர் (Bradley Cooper - A Star Is Born), வில்லியம் டேஃபோ (Willem Dafoe - At Eternity's Gate), ரமி மாலிக் (Rami Malek - Bohemian Rhapsody),விகோ மார்டென்சன் (Viggo Mortensen - Green Book). 

சிறந்த நடிகைகள்: யாலிட்ஸா அபாரிசியோ (Yalitza Aparicio - Roma), கிளென் க்ளோஸ் (Glenn Close - The Wife), ஒலிவியா கோல்மன் (Olivia Colman - The Favourite), லேடி காகா (Lady Gaga - A Star Is Born), மெலிசா மெக்கார்த்தி (Melissa McCarthy - Can You Ever Forgive Me?). 

சிறந்த இயக்குனர் : அல்ஃபோன்ஸா குவரோன் (Alfonso Cuaron - Roma), யோர் கோஸ், லந்திமோஸ் (Yorgos Lanthimos - The Favourite), ஸ்பைக் லீ (Spike Lee - BlacKkKlansman), ஆடம் மெக்கே (Adam McKay - Vice), பாவெல் பவ்லிகோவ்ஸ்கி (Pawel Pawlikowski - Cold War).

சிறந்த பிறமொழிப் படங்கள் : கேபர்நாம் - லெபனான் (Capernaum - Lebanon), கோல்ட் வார் - போலந்து (Cold War - Poland), நெவர் லுக் அவே - ஜெர்மனி, (Never Look Away - Germany), ரோமா - மெக்ஸிகோ (Roma - Mexico), ஷாப் லிஃப்டர்ஸ் - ஜப்பான் (Shoplifters - Japan).

சிறந்த துணை நடிகர் : மஹெர்ஷ்லா அலி, சாம் எலியட், ஆதம் ட்ரைவர், ரிச்சட் இ கிராண்ட்

சிறந்த துணை நடிகை : எமி ஆடம்ஸ், மரினா டெ டவிரா, ரெஜினா கிங், எம்மா ஸ்டோன், ரேச்சல் வீஸ்

சிறந்த இசை : ப்ளாக் பாந்தர், பிளாக் கிளான்ஸ்மன், இஃப் பியல் ஸ்ட்ரீட் குட் டாக்,  ஐல் ஆஃப் டாக்ஸ், மேரி பாப்பின்ஸ் ரிட்டர்ன்ஸ்

சிறந்த ஒளிப்பதிவு : லூகாஸ் ஜால், ரோபி ரியான், கேலம் டெஸ்சேனல், அல்போன்ஸா குரோன், மாத்யூ லிபாடிக்யூ. 

இவை தவிர அனைத்து துறைகளுக்கும் விருதுகளுக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com