சுடச்சுட

  

  நான் என்ன தவறு செய்தேன், பொய் தானே சொன்னேன்!: ஆபாசமான கமெண்ட்டுகள் குறித்து ஜூலி ஆவேசம்!

  By எழில்  |   Published on : 14th March 2019 12:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  julie_bb_newxx

   

  சமூகவலைத்தளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் செய்பவர்களுக்கு நடிகை ஜூலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக்பாஸ் என பிரபலமானவர் ஜூலி. தற்போது திரைப்படங்களில் நடித்துவருகிறார். 

  இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாக கமெண்ட் செய்பவர்களை விமரிசனம் செய்து நடிகை ஜூலி ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

  என்னை வேதனைப்படுத்துவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? என்னைக் கெட்டவார்த்தைகளால் கமெண்ட் செய்பவர்களுக்கு என்னால் என்ன நஷ்டம் ஏற்பட்டது? முடிந்துபோன ஒரு விஷயத்தை வைத்து இன்னும் என்னை மட்டம் தட்டுவது என்ன நியாயம்? நான் உண்டு, என் வேலையுண்டு என உள்ளேன், என்னை எதற்காக இழுக்கிறீர்கள்? அவ்வளவு கெட்ட வார்த்தைகள்! எதற்காக? என்னை ஏன் கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறீர்கள். நானும் இந்தத் தமிழ்நாட்டில் பிறந்தவள் தானே? உங்களுக்கு நான் அக்கா, தங்கை மாதிரியில்லையா? என்னைத் திட்டுவதால் சந்தோஷம் கிடைக்கிறதா? நிம்மதி வருகிறதா? அப்புறம் ஏன்? 

  நான் என்ன தவறு செய்தேன்? பொய் தானே சொன்னேன்? யார் யார் வாழ்க்கையில் ஒரு பொய்யும் சொல்லாதவர்களோ அவர்கள் கமெண்ட் போடட்டும். நான் அரிச்சந்திரன் வம்சம், நீ ஏன் பொய் சொன்னாய் எனக் கேட்கட்டும். என்னால் யாரும் அழிந்து போகவில்லை. ஒரு பெண்ணை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதுபோலத் தவறாகப் பேசுவது தமிழர் பண்பாடு கிடையாது. ஒவ்வொருமுறையும் ஒரு கெட்ட கமெண்ட்டைப் பார்த்தால் என் மனம் வேதனை அடைகிறது. என்னைத் தரமான கமெண்ட் மூலம் திட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் வாசித்துள்ளேன். அதற்கேற்றவாறு என்னைத் திருத்திக்கொள்வேன். எனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் நன்றி என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai