சுடச்சுட

  

  இளையராஜாவுக்குப் பாரத ரத்னா, நடிப்புத் துறையில் எம்ஜிஆர் பெயரில் தேசிய விருது: பாமக தேர்தல் அறிக்கை

  By எழில்  |   Published on : 15th March 2019 02:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ilaiayaraja_1111122xx

   

  மக்களவைப் பொதுத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா முழுக்க ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

  அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் மற்றும் புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

  இந்நிலையில் பாமக சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள 2019 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் திரைத்துறை தொடர்பாகக் கூறப்பட்டுள்ளதாவது:

  திரைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது போன்று, நடிப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாரத ரத்னா விருது பெற்ற நடிகரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் பெயரில் தேசிய விருது தோற்றுவித்து வழங்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தும். 

  மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றுத் தர பாமக பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.

  தேர்தல் அறிக்கை

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai