சுடச்சுட

  

  நடிகர் விஷாலுக்கு அனிஷாவுடன் இன்று திருமண நிச்சயதார்த்தம்!

  By சினேகா  |   Published on : 16th March 2019 11:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  anisha_vishalxx

  நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியைத் திருமணம் செய்யவிருப்பதாக சில மாதங்கள் முன்பு தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். திருமணத் தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார். 

  விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று (16 மார்ச்) ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.

  அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். அர்ஜுன் ரெட்டி, பெல்லி சொப்புலு போன்ற தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். 

  நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பின்புதான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் உறுதி எடுத்திருந்தார். கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை இன்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவுப்பு வெளியிடப்படும் என்கிறது விஷால் தரப்பு. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai