Enable Javscript for better performance
Happy Birthday Sunny Leon- Dinamani

சுடச்சுட

  

  நடிகை சன்னி லியோனுக்கு குவியும் பிறந்த நாள் வாழ்த்துகள்

  By DIN  |   Published on : 14th May 2019 11:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sunny

  சன்னி லியோன் தமிழர்களுக்கு எப்படி பரிச்சயமானார்? என்ற கேள்வி அனாவசியமானது. சன்னி தனது அடல்ட்ஸ் ஒன்லி திரைப்படங்கள் மற்றும் போர்ன் வீடியோக்கள் மூலமாக இன்று அகில உலகப் பிரபலம். இந்தியாவிற்கு அவரது வருகை பாலிவுட் திரைப்படங்கள் வாயிலாக அறிமுகமானது. தமிழில் ‘வடகறி’ என்றொரு திரைப்படத்தில் ஜெய்யுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்திருப்பார். 

  மே 13, 1981-ம் ஆண்டு கனடாவில் பிறந்தவர் சன்னி லியோன். இவரது தந்தை ஜெஸ்பால் சிங் தாய் பபுள் சிங். பஞ்சாப்பின் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்ற இண்டோ- கனடியர்கள் ஆவர்.

  நர்சிங் படிப்பை முடித்திருந்த சன்னி லியோன், 2003-ம் ஆண்டு, 'பென்ட்ஹவுஸ்' இதழின் அட்டைப் படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்தார். இதை அடுத்து தனது 19 வயதில் சன்னி லியோன் ஃபார்ன் படங்களில் நடிக்க தொடங்கினார். சன்னி லியோன் ஃபார்னோகிராபி படங்களில் நடிப்பது தனது குடும்பத்திற்கு தெரிய வர, அவரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தனர்.

  ஆனால் சன்னிக்கு இப்படிப்பட்ட அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லை. இன்றைய தேதிக்கு இந்தியாவில் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் வரலாறு காணாத டிராஃபிக் ஜாம் ஏற்படுத்தக் கூடிய நபர்களில் சன்னியும் ஒருவர். உதாரணம் அவர் கடந்தாண்டில் கொச்சிக்கு வருகை தந்த வீடியோவை யூடியூபில் தேடிப் பாருங்கள். சேட்டன்கள் இந்த கனடா பிரஜையான சேச்சியைக் காண எப்படித் தவித்திருக்கிறார்கள் என்று புரியும். அந்தக்கதையை விடுங்கள். ஆனால், அப்படிப்பட்ட இடத்தை அடைய இந்தப் பெண் எதையெல்லாம் தாண்டி வந்திருக்கிறார் என்று அவரது ஆதர்ஸ ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே! அதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது  ‘தி அன் டோல்டு ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்’ வெப் சீரிஸ். படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். 

  கனடாவுக்கு இடம்பெயர்ந்த இந்தியத் தம்பதியின் மகளாகப் பிறந்த சன்னிக்கு பெற்றோர் வைத்த பெயர் கரென்ஜித் கெளர். பள்ளியில் படிக்கும் போதே குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க முடியாமல் அடல்ட் படங்களில் நடிக்க முன் வருகிறார் இளம்பெண்ணான கரென்ஜித். திரைக்காக ஏன் பெயர் மாற்றம் என்றால்? கரென்ஜித் என்ற பெயரை வைத்துக் கொண்டு தன்னால் அடல்ட் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற முடியாது என நினைத்ததால் சன்னி லியோன் ஆனார். போர்னோ படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் அவரது வருமானம் பெருகத் தொடங்கிய நாட்களில் பெற்றொர் தமது மகளுக்கு லாட்டரி அடித்து விட்டதா? ஏது இத்தனை பணம் என யோசிக்கத் தொடங்கினர். அந்த நொடியில் தான்... கரென்ஜித்... தனது வேலையைப் பற்றி தன் பெற்றோரிடம் சொல்லத் துணிகிறார். பெற்றோர் இருவரையும் அமர வைத்து தனது வேலையைப் பற்றி விளக்குகிறார். ட்ரெய்லரில் சன்னிக்கும், அவரது சகோதரருக்குமான பாசப் பிணைப்பைப் பற்றியும் காட்சிகள் உள்ளன. போர்னோ படங்களில் நடிப்பதால் இந்தியாவில் சன்னியை எந்த அளவுக்கு மக்கள் விரும்புகிறார்களோ அதே அளவுக்கு அவர் மீது அசூயையும் காண்பிக்கப்படுகிறது. அப்படிக் கருதுகிறவர்கள் இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரைப் பார்த்தால் ஒருவேளை மனம் மாறலாம்.ஒரு நடிகை போர்னோ படங்களில் நடிக்கும் அளவுக்கு எப்போது துணிகிறார் என்றால்? என்ற கேள்விக்கான பதில் இந்த வெப் சீரிஸில் உண்டு. அதோடு கூட சன்னியும் கூட ‘தி கேர்ள் நெக்ஸ்ட் டோர்’  பெண் தான். அவரை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது இந்த திரைப்படம்.

  2 நிமிடங்கள் 18 நொடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லரை கண்ணிமைக்காமல் ஒரே வீச்சில் பார்த்து முடித்தால் நீங்களும் நிச்சயம் சிறந்ததொரு சன்னி ரசிகராகவே இருக்கக்கூடும்! ஆனால் இதற்கு முன்னர் அவரது குடும்பம் மட்டுமல்ல, இந்த சமூகமும் அவரை தவறான பெண்ணாகவே பார்த்தது. தனது சொந்த வாழ்க்கை பிரச்னைகள் பல இருந்தாலும், அடல்ட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் சன்னி. இந்நிலையில், சன்னியின் தந்தை, இறந்துவிடவே, அது சன்னியின் மனதை வெகுவாக பாதித்தது.

  குழந்தைகள் என்றால் சன்னிக்கு கொள்ளை பிரியம்.. கணவரின் சம்மத்துடன் நிஷா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சமீபத்தில் சன்னி லியோன் அளித்த நேர்காணல் ஒன்றில், தனது வாழ்வில் நான் எடுத்த முடிவுகள் தன் உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் எத்தகைய சங்கடங்களை உருவாக்கிவிட்டது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போதுதான் அதை உணர்கிறேன். இந்த வாழ்வின் எந்த புள்ளியில் நான் நிற்கிறேன் எனத் தெரியவில்லை. நிச்சயம் ஓரங்கட்டப்பட்ட ஒருத்தியாகவே வாழ்கிறேன். ஆனாலும் அது என்னை சோர்வடையச் செய்யவில்லை. என்னுடைய சிரிப்பை என்னிடமிருந்து யாரும் பறித்துவிட முடியாது.

  துணிச்சலுடன் வாழ்க்கையின் பிரச்னைகளை எதிர்கொண்ட சன்னி லியோனுக்கு அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் குவித்து வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai