ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த சம்மர் ஸ்பெஷல் படங்கள் இவைதான்! 

அக்னி நட்சத்திரம் அனல் பறந்து கொண்டிருக்க பலரும் குளிர் பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த சம்மர் ஸ்பெஷல் படங்கள் இவைதான்! 

அக்னி நட்சத்திரம் அனல் பறந்து கொண்டிருக்க பலரும் குளிர் பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் பலர் வெளிநாடுகளில் வாசம் செய்கின்றனர். மறுபுறம் வசூலை அள்ளிக் குவிக்கும் போட்டியுடன் பிரபலங்கள் நடித்திருக்கும் ஒரு டஜன் படங்கள் இம்மாதம் திரையரங்குகளை ஆக்ரமிக்கின்றன. 

கடந்த 1-ஆம் தேதி கௌதம் கார்த்திக் நடித்த 'தேவராட்டம்', 3-ஆம் தேதி அருள்நிதியின் 'கே13' வெளியாகியுள்ளது. இந்த வாரத்தில் அதர்வாவின் '100' வந்துள்ளது. விஷாலின் 'அயோக்கியா', ஜீவாவின் 'கீ' ஆகிய படங்களும் வந்துள்ளன. 

16-ம் தேதி விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்', 17-ம் தேதி சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்', எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'மான்ஸ்டர்' ஆகிய  படங்கள் வெளியாகின்றன. 21-ம் தேதி அஞ்சலி நடித்துள்ள 'லிசா 2',  31-ஆம் தேதி சூர்யாவின் 'என்ஜிகே', பிரபு தேவாவின் 'தேவி 2', ஜெய் நடிக்கும் 'நீயா 2' ஆகிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர விக்ரமின் ’கடாரம் கொண்டான்', விமல் நடிக்கும் 'களவாணி 2' படங்களும் வெளியாகவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com