கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இந்த வாரம் மே 31 அன்று இரு தமிழ்ப் படங்கள் மட்டும் வெளிவருகின்றன. ஆனால் அந்த இரு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள படங்கள்.
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா, ஆர்ஜே பாலாஜி, நந்திதா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் தேவி 2. இசை - சாம் சிஎஸ்.
இந்த இரு படங்களும் முதல் மூன்று நாள்களில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.