Enable Javscript for better performance
I would love to play Jagan Anna in his biopic says Suriya- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க விருப்பம்: சூர்யா

    By எழில்  |   Published on : 29th May 2019 11:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    suriya_jagan12

     

    ஆந்திரத்தில் உள்ள 175 பேரவைத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151-ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை சந்தித்திராத மாபெரும் தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியால், 3 மக்களவைத் தொகுதிகளிலும், 23 பேரவை தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதையடுத்து ஆந்திர முதல்வராக அதன் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை, திரைப்படமாக உருவானால், அப்படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார். சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    சுதா இயக்கத்தில் நடித்து வரும் சூரரைப் போற்று, முழுமையான வாழ்க்கை வரலாற்றுப் படமல்ல. கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் பணிகளில் ஊக்கமடைந்து, அந்தக் கதையைத் திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்ற விரும்பினோம். ஆய்த எழுத்து காலத்திலிருந்து இயக்குநர் சுதாவுடன் நட்பு உண்டு. அவர் என்னுடைய ராக்கி சகோதரி. அவருடைய திறமை மீது எனக்கு அதிக மதிப்பு உள்ளது. இந்தப் படம் தொடங்க அவர் மூன்று வருடங்கள் காத்திருந்தார். 

    ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகும்போது, அப்படத்தை எடுப்பவர்கள் நல்ல கதை, திரைக்கதையுடன் என்னை அணுகினால், ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவேன் என்று கூறியுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai