கமலுக்கு இப்படியொரு வாழ்த்தை தெரிவித்து பிரமிக்க வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

இன்று, நவம்பர் 8, சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலகக் குருவான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலையை கமலும் ரஜினியும் இணைந்து திறந்தார்கள்.
rajni and kamal
rajni and kamal

இன்று, நவம்பர் 8, சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் திரையுலகக் குருவான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலையை கமலும் ரஜினியும் இணைந்து திறந்தார்கள். இந்த விழாவில் பாலசந்தா் குடும்பத்தினா், இயக்குனர் மணி ரத்னம், நாசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கூறியது, ‘நீ தமிழ் மட்டும் கத்துக்கோ நான் உன்னை எங்கே கொண்டு போய் உட்கார வைக்கறேன் பாரு' என்று என்னிடம் முதன்முதலில் சொல்லியவர் இயக்குனர் இமயம் கே.பாலசந்தர்.

கேபி சார் பெரிய மகான். அவருக்கு மிக மிகப் பிடித்த குழந்தை கமல்ஹாசன். கமல் மேல் அவருக்கு அபார பிரியம். ஷூட்டிங்ல கமல் தள்ளி உட்கார்ந்திருப்பார், யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பார். கேபி சார் தூர இருந்து அவரை ரசிச்சிட்டே இருப்பார். தன்னுடைய சிஷ்யன் அப்படிங்கறதைத் தாண்டி ஒரு பிள்ளையைப் போலத்தான் கமலை அவர் நினைச்சார்.

இன்று நவம்பர் 8, அனந்துவின் பிறந்த நாளும் கூட. கேபி சாரை விட அனந்து சாரிடம்தான் கமலுக்கு அன்னியோன்யம் அதிகம். காரணம் நாம் நினைத்தது எல்லாம் கேபி சாரிடம் சொல்ல முடியாது. ஒரு பக்தி, பயம் இருக்கும். ஆனால் அனந்துவிடம் நண்பராக பழகுவார் கமல். கமலை மாடர்னாகவும் அவரிடம் பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி, உருவாக்கியவர் அனந்து சார்தான். அவர் பிறந்த நாளான இன்று, இந்த ஆபிஸை திறந்து, கேபி சார் சிலையை திறந்து வைத்திருக்காங்க. ரொம்ப நல்ல விஷயம்.

எத்தனை பேர் எத்தனை சிலை வைத்தாலும் கேபி சாரின் நெருங்கிய மாணவன், அவர் வளர்த்த பிள்ளை அவருடைய சிலையை வைத்திருப்பது மிக மிக பொருத்தமாக இருக்கிறது. ராஜ்கமல் நிறுவனம் தமிழ்ல மட்டுமல்ல இந்திய அளவில் நிறைய படங்கள் எடுக்கணும், வாழ்த்துகள்’ என்று தன் நண்பரை மனதார வாழ்த்தினார் ரஜினிகாந்த்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தில் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா, அவரது தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்குரைஞா் டி. சீனிவாசன் உருவச் சிலை திறப்பு விழா மற்றும் ‘மய்யம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்’ தொடக்க விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது. 

இன்று மதியம் 3.30 மணிக்கு, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை சத்யம் திரையரங்கில் ‘ஹேராம்’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. படம் முடிந்ததும், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் கமல் கலந்து கொண்டு பதிலளிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com