15 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை

இளம் வயதிலேயே நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து 25 ஆண்டு காலமாக திரைத்துறையில் சாதனை புரிந்து வருகிறார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு கணவரின் இயக்கத்தில் நடிக்கும் நடிகை

இளம் வயதிலேயே நடிக்க வந்த ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து 25 ஆண்டு காலமாக திரைத்துறையில் சாதனை புரிந்து வருகிறார். கதாநாயகியில் தொடங்கி, வில்லி, அம்மா, அக்கா, அண்ணி என்று அவர் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து  புகழின் உச்சிக்குச் சென்றார். ஆக்ரோஷமான நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர் ரம்யா கிருஷ்ணன். அதன் பிறகு பாகுபலி படத்தில் சாந்தமான அதே சமயத்தில் ஆளுமையான அரசி சிவகாமியாக நடித்து இந்திய திரை ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். 

சொந்த வாழ்க்கையைப் பொருத்தவரை 2003-ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா. 1998-ம் வெளியான 'சந்திரலோகா' எனும் படத்தில்தான் தன் காதல் கணவரை முதன்முதலில் சந்தித்துள்ளார். திருமணத்துக்குப் பின் நடித்து வெற்றி பெரும் நடிகைகளின் பட்டியலில் முதலில் இருப்பவர் ரம்யா கிருஷ்ணன் தான் என்றால் மிகையில்லை. அந்தளவுக்கு தொடர்ந்து தென்னிந்தியப் படங்களில் நடித்து வருகிறார். 

கிருஷ்ண வம்சி இயக்கத்தில் 2004-ல் வெளிவந்த 'ஸ்ரீ ஆஞ்சநேயம்' என்ற படத்தில்தான் கடைசியாக நடித்தார். தற்போது 15 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கணவர் வம்சி இயக்கத்தில் வந்தே மாதரம் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இதில் பிரகாஷ் ராஜ், அவிகா கேர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார் ரம்யா கிருஷ்ணன். 1988-ஆம் ஆண்டு வெளியான 'படே மியான் சோட்டே மியான்' என்ற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்த ரம்யா கிருஷ்ணன், 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'உயர்ந்த மனிதன்' படத்தில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கிறார். இந்தியிலும் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு தேரா யார் ஹூன் மெய்ன்' என பெயரிட்டுள்ளனர்.

இவை தவிர டிவி சீரியல்களிலும் அவ்வப்போது நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com