சுட்டாலும் அதைச் சரியாக சுடுங்கடா! 'சாஹோ' படக்குழுவை விளாசித் தள்ளிய பிரெஞ்சு இயக்குநர்

அண்மையில் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம் 'சாஹோ'.
சுட்டாலும் அதைச் சரியாக சுடுங்கடா! 'சாஹோ' படக்குழுவை விளாசித் தள்ளிய பிரெஞ்சு இயக்குநர்

அண்மையில் வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம் 'சாஹோ'. பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்த இப்படம் ரூ. 250 கோடியில் தயாராகியுள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ளது இப்படம். யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். ஷ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று வெளியான சாஹோ படத்துக்குக் கிடைத்துள்ள விமரிசனங்கள் அதற்குச் சாதகமாக இல்லை. பலரும் படத்துக்கு எதிர்மறையான விமரிசனங்களை அளித்துள்ளனர்  இந்நிலையில் தனது படத்தைத் சாஹோ இயக்குநர் காப்பி அடித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டினை பிரெஞ்சு த்ரில்லர் இயக்குனர் லார்கோ வின்ச் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

ஆகஸ்ட் 31-ம் தேதி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகும் என்ற எதிர்ப்பார்ப்புடன் பிரமாண்டமாக வெளியான சாஹோவிற்கும், 2008-ல் வெளியான லார்கோ வின்ச் என்ற பிரெஞ்சு படத்துக்கும் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி, இயக்குநர் ஜெரோம் சாலேவின் ரசிகர்கள் அவருக்கு ட்வீட் செய்தனர். சுனில் என்றொரு ரசிகர் ஜெரோமிடம் இதைப் பற்றிய ட்வீட் அனுப்பவே, அதற்கு பதிலாக ஜெரோம் சாலே ‘இந்தியாவில் எனக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது’ என்று பதில் ட்வீட் போட்டார்.

மேலும் சில ரசிகர்களுக்கும், இதே போன்ற கேள்விகளை எழுப்பியவே, அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக ஜெரோம் சாலே மீண்டும் ஒரு பதிவை எழுதினார் ‘லார்கோ வின்ச்சின் இரண்டாவது “ஃப்ரீமேக்” முதலாவதைப் போலவே மோசமானது. எனவே, தெலுங்கு இயக்குநர்களே, நீங்கள் எனது படத்தைத் திருடினால், குறைந்தபட்சம் அதைச் சரியாகச் செய்யலாம் இல்லையா? என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டது ‘இந்தியாவில் எனக்கான எதிர்கால வாழ்க்கை’ பற்றி கேட்டிருந்தவர்களுக்கான பதில் ஸாரி... என்னால் உதவ முடியாது.’ என்று கேள்வியெழுப்பிய இணையதளத்தை டாக் செய்து பதில் பதிவிட்டிருந்தார் ஜெரோம் சாலே.

சமூக இணையதளங்களிலும், சில பொது இணையதளங்களிலும் இந்தச் சர்ச்சை அதிகம் கவனம் பெறாமல் ஓடிக் கொண்டிருக்க, சர்வதேச அளவில் வசூலில் அசத்தி வருகிறது சாஹோ. இப்படத்தைத் தயாரித்துள்ள யூவி கிரியேஷன்ஸ், சாஹோ படத்தின் ஒவ்வொரு நாளின் வசூலை அதிகாரபூர்வமாக அறிவித்து வருகிறது. இதன்படி சாஹோ, கடந்த ஞாயிறு வரை, அதாவது முதல் மூன்று நாள்களில் உலகளவில் ரூ. 294 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சாஹோ படம் குறைந்தபட்சம் ரூ. 400 கோடி வசூலை உலகளவில் ஈட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com