கோல்டன் குளோப் விருதுகள் 2020:  அதிக விருதுகளை அள்ளிக் குவித்த '1971' மற்றும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' 

ஞாயிற்றுக்கிழமை இரவு  77-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கோல்டன் குளோப் விருதுகள் 2020:  அதிக விருதுகளை அள்ளிக் குவித்த '1971' மற்றும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' 

ஞாயிற்றுக்கிழமை இரவு  77-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சியில் சிறந்ததை  தேர்ந்தெடுத்து கெளரவித்தது.

யுனிவர்சலின் போர் திரைப்படமான '1917' மற்றும் சோனியின் நகைச்சுவைத் திரைப்படமான 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்' ஆகியவை ஞாயிற்றுக்கிழமை இரவு 77-வது கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த பரிசுகளை பெற்றன.  இவை முறையே சிறந்த நாடகம் மற்றும் சிறந்த நகைச்சுவை படங்களுக்கான பரிசை வென்றன.  

ஜூடி என்ற படத்தில் நடித்த ரெனே ஜெல்வெகர் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்  மற்றும் ஹாக்கின் பீனிக்ஸ் ஜோக்கர் படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வென்றார். இவர் ஆடம் டிரைவர் மற்றும் கிறிஸ்டியன் பேல் ஆகியோருடன் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் இவ்விருதைப் பெற்றார்.

பீனிக்ஸ் தனது உரையில் காலநிலை மாற்றங்களைப் பற்றி குறிப்பிட்டார். ஹாலிவுட் மற்றும் ஃபாரின் பிரஸ் அசோசியேஷனுக்கு நன்றி தெரிவித்தார். தனது சக நடிகர்களிடம், "நாம் தனி ஜெட் விமானங்களில் பாம் ஸ்பிரிங்ஸுக்கு வர வேண்டியதில்லை’ என்றார்.
.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com