ஓடிடி தளத்தில் வெளியாகிறதா காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ்?

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள படம்...
ஓடிடி தளத்தில் வெளியாகிறதா காஜல் அகர்வால் நடித்த பாரிஸ் பாரிஸ்?

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ள படம் - பாரிஸ் பாரிஸ். இசை - அமித் திரிவேதி. ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தமிழ்  ரீமேக் இது.

குயின் கன்னட ரீமேக்கையும் ரமேஷ் அரவிந்த் தான் இயக்கியுள்ளார். பருல் யாதவ் நடிப்பில் பட்டர்பிளை என்கிற பெயரில் அந்தப் படம் உருவாகியுள்ளது. மலையாளத்தில் ஸாம் ஸாம். மஞ்சிமா மோகன் நடிப்பில் நீலகண்ட ரெட்டி இயக்கியுள்ளார். தெலுங்கில் தட் ஈஸ் மகாலட்சுமி. தமன்னா நடிப்பில் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். 

இந்நிலையில் குயின் பட ரீமேக்கின் இந்த நான்குப் பதிப்புகளும் அமேசான் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com