கொடைக்கானல் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்த சூரி, விமல்: அபராதம் விதிப்பு!

கொடைக்கானல் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
படங்கள்: ட்விட்டர்
படங்கள்: ட்விட்டர்

கொடைக்கானல் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் கொடைக்கானலில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரி, விமல் ஆகிய இருவரும் தங்கள் சமூகவலைத்தளப் பக்கங்களில் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்தபோது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்தார்கள். இதையடுத்து கடந்த 18-ம் தேதி பேரிஜம் ஏரியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றத்துக்காக சூரி, விமல் உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும் ஊரடங்கு காலத்தில் அனுமதியில்லாமல் கொடைக்கானல் ஏரியில் மீன் பிடித்ததாக நடிகர் விமல் மற்றும் சூரி மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் மகேந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். நடிகர்கள் இருவரும் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு எப்படி வந்தார்கள், தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக பேரிஜம் ஏரிக்குச் சென்றது எப்படி எனக் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com