பாக்யராஜ் மகனாக நடிப்பதை விடவும் குறும்படம் இயக்குவதுதான் பெருமைக்குரியது: ஷாந்தனு உருக்கமான பதிவு

அப்பாவையும் அம்மாவையும் சந்தோஷப்படுத்த வேண்டும் எனத் தோன்றியது...
பாக்யராஜ் மகனாக நடிப்பதை விடவும் குறும்படம் இயக்குவதுதான் பெருமைக்குரியது: ஷாந்தனு உருக்கமான பதிவு

தான் இயக்கிய குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் ஷாந்தனு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி செய்யவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் ஷாந்தனு பாக்யராஜ்.

மனைவி கிக்கி விஜய்யுடன் இணைந்து நடித்து, கொஞ்சம் கரோனா நிறைய காதல் என்கிற குறும்படத்தை இயக்கி, அதைக் கடந்த வாரம் வெளியிட்டார் ஷாந்தனு பாக்யராஜ். கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இந்தக் குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இயக்குநராக என்னுடைய முதல் முயற்சி. தொழில்முறை உபகரணங்கள் இன்றி ஐபோனில் மட்டுமே படமாக்கப்பட்ட படம் இது என்று கூறினார். ஷாந்தனுவின் இந்தக் குறும்படத்துக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் ஷாந்தனு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வைப் பிரபலங்கள் பலரும் உருவாக்கிய நிலையில் என் பங்குக்கும் சிறியதாக ஒன்றைச் செய்ய நினைத்தேன்.

பாக்யராஜ் புள்ளை நடிக்கிறேன் என்பதை விடவும் கதை எழுதி, இயக்கி ஒரு குறும்படம் வெளியிடுவதுதான் பெருமையான விஷயமாகப் பட்டது. அப்பாவையும் அம்மாவையும் சந்தோஷப்படுத்த வேண்டும் எனத் தோன்றியது. இந்தக் குறும்படம் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது. இதுவரைக்கும் 8 லட்சத்தை நெருங்கும் வரை பலரும் பார்த்து ரசித்துள்ளார்கள். கிடைத்த நல்ல பெயரைத் தக்கவைக்க வேண்டும் என்கிற பயம் வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com