பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கரோனா தொற்று

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக உலகப்புகழ் பெற்ற (WWE) மல்யுத்த வீரராக களத்தில் இருந்து பின்னர் ஹாலிவுட் திரையுலகில் நுழைந்தவர் ட்வைன் ஜான்சன். இவரை பெரும்பாலானோர் ‘ராக்’ என்னும் பட்டப்பெயராலயே  என்றே அழைப்பார்கள். இவர் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’,’ பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனக்கும் தனது மனைவி மற்றும் மகள்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘அனைவரும்  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளுங்கள். கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள். உங்கள் குடும்பத்தை பாதுகாப்புடன் பார்த்து கொள்ளுங்கள். எங்கள் குடும்பத்திற்கு இதுவொரு சோதனையான காலம். இருப்பினும் இதிலிருந்து மீண்டு வருவோம்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com