எஸ்.பி.பிக்கு தாதாசாகேப் பால்கே விருது: நடிகர் விவேக் கோரிக்கை

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டுமென்று நடிகர் விவேக் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை: மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டுமென்று நடிகர் விவேக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 50 ஆண்டுகளாக இந்திய திரை மொழிகள் பலவற்றில் 42 ஆயிரம் பாடல்களுக்கும் மேலாக பாடி, ‘கின்னஸ்’ சாதனை செய்திருக்கிறார், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இதுதவிர, பல ஆயிரம் பக்தி பாடல்களை பாடி ஆன்மிகத்துக்கும் சேவை செய்து இருக்கிறார்.

72 படங்களில் நடித்து இருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். சிறந்த இந்திய குடிமகனாக திகழ்ந்து இருக்கிறார். இத்தனை சிறந்த இசை கலைஞருக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று தமிழ் திரையுலகம் சார்பாகவும், கோடிக்கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com