இன்று முதல் சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் மெட்டி ஒலி தொடர்!

தொலைக்காட்சி தொடர்களைப் பார்க்க விரும்பாதவர்களையும் தொடர்ச்சியாகப் பார்க்க வைத்த தொடர், மெட்டி ஒலி...
இன்று முதல் சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் மெட்டி ஒலி தொடர்!

தொலைக்காட்சி தொடர்களைப் பார்க்க விரும்பாதவர்களையும் தொடர்ச்சியாகப் பார்க்க வைத்த தொடர், மெட்டி ஒலி. இந்தத் தொடர் இன்று முதல் சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகிறது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 40,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் இதனால் சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதாலும் டிவி தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பாகவேண்டிய பல டிவி தொடர்கள் ஒளிபரப்பாகவில்லை. கடந்த 18-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற்றதை வைத்து கடந்த வாரம் (வெள்ளி வரை) எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் தொடர்கள் ஒளிபரப்பாகின. ஆனால் இந்த வாரத்துக்குத் தேவையான எபிசோட்களைப் படமாக்க முடியாமல் போனது. இதனால் பல தொலைக்காட்சிகளில் பழைய டிவி தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

இதன்படி, ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற மெட்டி ஒலி தொடரை இன்று முதல் மீண்டும் ஒளிபரப்புகிறது சன் டிவி. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

திருமுருகன் இயக்கிய இந்தத் தொடரில் திருமுருகன், டெல்லி குமார், சேத்தன், காவேரி, காயத்ரி, போஸ் வெங்கட், சஞ்சீவ் போன்றோர் நடித்துள்ளார்கள். இத்தொடரின் டைட்டில் பாடலான அம்மி அம்மி அம்மி மிதித்து... மிகவும் பெற்ற ஒன்றாகும். வைரமுத்து எழுதிய இப்பாடலை நித்யஸ்ரீ மகாதேவன் பாடினார். இசை - தினா. 811 எபிசோட்கள் வரை ஒளிபரப்பான இத்தொடர், 2002 ஏப்ரல் 8-ல் தொடங்கி, 2005 அக்டோபர் 14-ல் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com